சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் நள்ளிரவில் ‘புர்கா’ அணிந்து மாணவிகளின் படுக்கை அறைக்குள் புகுந்து பாலியல் தொந்தரவு செய்தும், மாணவிகள் குளிக்கும் காட்சிகளை வீடியோ எடுத்த முன்னாள் மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். சென்னை கிண்டி ஐஐடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு தனியாக ஐஐடி வளாகத்திலேயே விடுதிகள் உள்ளது. இந்நிலையில், ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி பெண்கள் விடுதியில் மர்ம நபர் ஒருவர் ‘புர்கா’ அணிந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், குளிக்கும்போது அதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து வருவதாகவும் மாணவிகள் ஐஐடி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
அதன்படி பாலியல் தொந்தரவு நடக்கும் சபர்மதி பெண்கள் விடுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஐஐடி தலைமை பாதுகாப்பு அதிகாரி பிரகாஷ்(50) தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது கடந்த 17ம் தேதி 5 மணிக்கு ‘புர்கா’ அணிந்து சந்தேகப்படும் வகையில் சபர்மதி பெண்கள் விடுதிக்குள் செல்லும் காட்சி பாதிவானது. இதனால், சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரி பிரகாஷ் மர்ம நபரை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று சிசிடிவி காட்சிகளை கண்காணித்தப்படி, பெண் பாதுகாப்பு அதிகாரி மெரின் சிமிராஜ் தலைமையில் பெண்கள் பாதுகப்பு குழுவினரை சபர்மதி விடுதிக்கு அனுப்பினார்.
அப்போது அந்த மர்ம நபர் புர்கா அணிந்த படி மாணவிகளின் குளியல் அறை பகுதிக்கு செல்வதும், பிறகு தனியாக விடுதியின் 5வது மாடியில் உள்ள அறையில் மாணவிகள் யாரேனும் இருக்கிறார்களா என்று நோட்டமிட்டுள்ளார். தன்னை யரோ நோட்டமிடுவதை கவனித்த புர்கா அணிந்து வந்த நபர், பாதுகாப்பு குழுவினரிடம் இருந்து தப்பித்து ஓடினார். பின்னர் சம்பவம் குறித்து ஐஐடி மூத்த பாதுகாப்பு அதிகாரி பிரகாஷ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி, போலீசார் மர்ம நபர் வந்து சென்ற மாணவிகள் விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவன் உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் அசோக் நகர் பகுதியை ஷேர்நத் ரோகன் லால்(26) என்றும், இவர் எம்.எஸ் (எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்) சென்னை ஐஐடியில் முடித்த முன்னாள் மாணவன் என தெரியவந்தது. இதனையடுத்து ரோகன் லால், சென்னை ஐஐடியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரோகன் லால் கடந்த பிப்ரவரி 16ம் தேதி யாருக்கும் தெரியாமல் விடுதியில் நுழைந்து தனது காதலியுடன் தகராறு செய்துள்ளார். எனினும், கடந்த மாதம் 3ம் தேதி நள்ளிரவு தவறான நோக்கத்தில் சபர்மதி விடுதிக்குள் புகுந்து மாணவியின் படுக்கை அறை பகுதியில் பதுங்கி இருந்தார். உடனே மாணவன் ரோகன் லாலை பிடித்து ஐஐடி நிர்வாகம் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு போலீசார் ரோகன் லாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மாணவன் தரப்பு ஆஜரான வழக்கறிஞர் ரோகின் லால் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்களை நீதிமன்றதில் சமர்ப்பித்தார். அதை தொடர்ந்து மாணவனை நீதிமன்றம் பிணையில் விட்டது. எனினும் திருந்தாத ரோகக் அதே தவறை செய்ததால் கோட்டூர்புரம் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் கடந்த 18ம் தேதி மதியம் தரமணி ஸ்ரீராம் நகர் காலனி சந்திப்பில் வைத்து பிடித்தனர்.சரியாக சிகிச்சை பெறாத ரோகின் லால், சைக்கோவாக மாறியது வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியின் பின் பக்க கேட்டின் பூட்டை உடைத்து, காதலியை பார்க்க பெண் போல் ‘புர்கா’ அணிந்து கொண்டு உள்ளே நுழைந்து குளியல் அறைக்குள் புகுந்து யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்தது தெரியவந்ததது. உடனே முன்னாள் மாணவன் ரோகின் லால் செல்போனை பறிமுதல் செய்து பார்த்த போது, அதில், மாணவிகளின் குளியல் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதைதொடர்ந்து பிடிபட்ட முன்னாள் மாணவன் ரோகன் லால்(26) மீது கோட்டூர்புரம் போலீசார் ஐபிசி 448, 454, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ரோகன் லாலை புழல் சிறையில் அடைத்தனர். ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியின் பின் பக்க கேட்டின் பூட்டை உடைத்து பெண் போல் ‘புர்கா’ அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தர்.