சென்னை: ஒன்றிய அரசின் இக்னோ பல்கலைக்கழகம், தொலைதூரக்கல்வி வாயிலாக கலை, அறிவியல், வணிகம், இதழியல் மற்றும் மக்கள்தொடர்பு, சட்டம், கல்வி, மேலாண்மை, சமூக அறிவியல் பாடங்களில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது 2025 ஜனவரி பருவத்துக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 31ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில் தற்போது பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் நலன் கருதி பிப்ரவரி 15ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்படுகிறது. இக்னோ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை (www.ignou.ac.in) காணலாம் என்றார்.