சென்னை: அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த உதகை ஜிம்கானா கிளப்புக்கு ஐகோர்ட் கெடு விதித்துள்ளது. உதகையில் 10.32 ஏக்கர் அரசு நிலம் 1922-ல் ஜிம்கானா கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் அந்த குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டதுடன் குத்தகை தொகையும் மாற்றியமைக்கப்பட்டது. கிளப் நிர்வாகம் பாக்கி வைத்திருந்த தொகையை செலுத்துமாறு 2011-ல் முதல் முறையாக வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீசுக்கு எதிராக கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.