Saturday, April 13, 2024
Home » ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 11வது இடத்திற்கு முன்னேறினார் கேப்டன் ரோஹித் ஷர்மா

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 11வது இடத்திற்கு முன்னேறினார் கேப்டன் ரோஹித் ஷர்மா

by Suresh

துபாய்: டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் 2 புள்ளிகள் பெற்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவுற்ற நிலையில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. சம்பிரதாய போட்டியான கடைசி டெஸ்ட் நாளை தர்மசாலா மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், துருவ் ஜுரேல் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா 297 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன் காரணமாக 1 புள்ளி அதிகம் பெற்று 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் 744 புள்ளிகளுடன் “கிரிக்கெட்டின் கிங்” என அழைக்கப்படும் விராட் கோலி ஒரு புள்ளி அதிகம் பெற்று 8வது இடத்திலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் 2 இரட்டை சதங்களை விளாசி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 புள்ளிகள் அதிகம் பெற்று 727 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.

தரவரிசை பட்டியலின் முதல் இடத்தில நியூசிலாந்து அணியின் பேட்டர் கேன் வில்லியம்சன் 870 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் 799 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் இந்திய பேட்ஸ்மேன்களில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

You may also like

Leave a Comment

thirteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi