டெல்லி: IC814 வெப் தொடர் தொடர்பாக நெட்பிளிக்ஸ் உள்ளடக்க தலைவருக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. நெட்பிளிக்ஸில் வெளியான IC814 வெப் தொடரில் தவறான தகவல்கள் இடம்பெற்றதாக புகார் எழுந்ததால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கந்தகர் விமானக் கடத்தல் தொடர்பாக வெளியான வெப் தொடரில் தவறான தகவல் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது. விமானத்தைக் கடத்தியவர்களின் பெயர்களை இந்து பெயர்களாக மாற்றியதாக சர்ச்சை எழுந்ததால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.