மதுரை: முறைகேடு புகாரில் ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார், பால்வளத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. முறைகேடு புகாரில் தனது சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி கிறிஸ்துதாஸ் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கிறிஸ்துதாஸ் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட், 3 மாதங்களில் மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கையை முடிக்கவும் ஆணையிட்டுள்ளது.
முறைகேடு புகாரில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்ய ஐகோர்ட் கிளை ஆணை
0