சென்னை: ‘‘மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலுக்கு பார்வையாளர்களாக தமிழ்நாட்டில் இருந்து 43 ஐஏஎஸ் அதிகாரிகளும், 15 ஐபிஎஸ் அதிகாரிகளும் செல்கின்றனர்’’ என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் இந்த மாதம் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்தில் இருந்து 43 ஐஏஎஸ் அதிகாரிகளும், 15 ஐபிஎஸ் அதிகாரிகளும் செல்கின்றனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று கூறியதாவது:தமிழகத்தில் இருந்து 5 மாநிலங்களில் நடக்கும் தேர்தல் பணிக்காக (பார்வையாளர்கள்) டி.என்.வெங்கடேஷ், எம்.ஆஷா மரியம், பி.பழனிசாமி, எஸ்.கணேஷ், எம்.விஜயலட்சுமி, கே.ராஜாமணி, ஆர்.கண்ணன், எஸ்.நடராஜன், கே.விஜயகார்த்திகேயன், வி.ஜெயா சந்துரு பானுரெட்டி, சந்திரசேகர் சாகாமுரி, கவிதா ராமு, டி.அன்பழகன், பி.ஸ்ரீவெங்கட பிரியா, ஆர்.சீதாலட்சுமி, ஏ.சண்முகசுந்தரம், மகேஸ்வரி ரவிகுமார், டி.ரத்னா, எஸ்.கோபால சுந்தரராஜ், எம்.ஆர்த்தி, அமர் குஷ்வாலா, எஸ்.பி.கார்த்திகா, கே.பாலசுப்பிரமணியம்,
பி.காயத்ரி கிருஷ்ணன், ஸ்ரேயா பி.சிங், பி.ரமணா சரஸ்வதி, ஜெ.விஜயராணி, பி.ஆகாஷ், ஜெ.ஜெயகாந்தன், எஸ்.நடராஜன், பி.மகேஸ்வரி, ஆர்.நந்தகோபால், எஸ்.பிரபாகர், எஸ்.சுரேஷ்குமார், கனீஷ் சகாப்ரா, கே.விவேகானந்தன், கே.எஸ்.கந்தசாமி, வி.சம்பத், எம்.லட்சுமி, ராசுமிசித்தார்த், எஸ்.ஜெயந்தி, எஸ்.மலர்விழி, எஸ்.செந்தாமரை ஆகிய 43 ஐஏஎஸ் அதிகாரிகளும்,டி.கல்பனா நாயக், நஜ்முல் ஹோடா, மகேந்திரகுமார் ரதோட், பி.சி.தேன்மொழி, கே.புவனேஸ்வரி, ஏ.ஜி.பாபு, பி.கே.செந்தில்குமார், எஸ்.மல்லிகா, என்.காமினி, ரூபேஷ்குமார் மீனா, அபிஷேக் டிஷிட், எஸ்.லட்சுமி, ஏ.கயல்விழி, டி.மகேஷ்குமார், என்.தேவராணி ஆகிய 15 ஐபிஎஸ் அதிகாரிகளும் தேர்தல் பணிக்கான செல்ல உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.