சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் ஊக்கத்தொகையை யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகைத் திட்டத்தை யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.