சென்னை: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடர்பாக எடப்பாடி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘மக்களைக் காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்கிற பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும்கட்சியாக இருந்த வரலாறு அதிமுகவுக்கு மட்டும்தான் உண்டு. பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கட்சியை வழி நடத்திடும் வாய்ப்பை, காலம் எனக்கு வழங்கியிருக்கிறது.
என்னோடு இணைந்து உழைத்திட இந்த எழுச்சிப் பயணத்திற்கு அழைக்கிறேன். தமிழ் நாட்டு மக்களைக் காக்க உங்களில் ஒருவனாக முன்நின்று, முன்கள வீரனாக முன்னே செல்கிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இவ்வெற்றிப் பயணத்தில் என்னோடு இணைந்து ஈடு இணையற்ற சிப்பாய்களாக நீங்கள் வர வேண்டும். தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் நாம் எழுச்சியோடு செல்ல வேண்டும். நாம் செய்த சாதனைகளை உரக்கச் சொல்ல வேண்டும்; இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.