விழுப்புரம்: அன்புமணி உடனான பிரச்சனை குறித்து பேசினோம்; பேசிக்கொண்டே இருக்கிறோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு; அந்த முடிவு வரலாம். அன்புமணி மன்னிப்பு கேட்பது பிரச்சனை அல்ல; நான் தொடங்கிய கட்சியில் நான் சொல்கிறபடி அவர் செயல்பட வேண்டும். என் மூச்சு இருக்கும்வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்தான். என்னால் நியமிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர பொறுப்புதான். தைலாபுரம் தோட்ட வாசலில் இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டது சில விஷமிகளின் செயல். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு வரவில்லை. முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை அவமதித்தது வருந்தக்கூடியது. தமிழ்நாட்டின் மக்களின் உள்ளங்களில் வாழும் தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது. கருத்தில் முரண்பாடு இருந்தாலும் தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது என்று கூறினார்.
என் மூச்சு இருக்கும்வரை நானே தலைவர்: ராமதாஸ் திட்டவட்டம்
0