டெல்லி: I.N.D.I.A கூட்டணியின் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கபப்ட்டுள்ளது. டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் வரும் 13ம் தேதி முதல் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடுகளை இறுதி செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், திமுக, சிவசேனா, ஆகிய 13 கட்சிகளை சேர்ந்த முத்த தலைவர்கள் இந்த I.N.D.I.A கூட்டணி கூட்டம் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு என்பது முதல் முதலாக குடக்கூடிய நேரம் என்பது அறிவிக்கபப்ட்டிருக்கின்றது.
வரும் செப்டம்பர் 13ம் தேதி டெல்லியில் இருக்கக்கூடிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அவருடைய இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கபப்ட்டிருக்கின்றது. இதில் மிக முக்கியமாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்றது. தற்பொழுது இன்றைய தினம் டெல்லியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கபப்ட்டிருக்கக்கூடிய ஒரு நாடு, ஒரு தேர்தல், தொடர்பான அந்த குழுவினுடைய முதல் கூட்டமானது நடைபெற இருக்கின்றது.
இந்தியா பாரத் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது, இப்படி அரசியல் ரீதியாக மிகப்பெரிய கூட்டம் என்பது எதிர் கட்சிகளுக்கு ஆளும் பாரதி ஜனதா கட்சியினுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்களது தேர்தல் வரக்கூடிய காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடிய சூழலில் அதனை சமாளிப்பது ஏற்கனவே I.N.D.I.A கூட்டணியின் சார்பாக தெரிவிக்கப்பட்டது, இனி கூட்டங்கள் எல்லாம் நடைபெறாது அதாவது பெங்களூரு, பாட்னா போன்ற நகரங்களில் நடைபெறுவது போன்ற கூட்டங்கள் நடைபெறாது.
ஒருங்கிணைப்புக் குழு பொறுத்தவரை தலைவர்கள் எங்கே ஒருங்கிணைப்பது, பிரச்சாரங்களை எவ்வாறு செய்வது பிரச்சாரங்களை முன்னெடுப்பது எப்படி தொகுதி பங்கீடு எப்படி போன்ற இருக்கின்றது . குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்குள் இருக்கக்கூடிய பிழைகளை செரிசெய்வதற்காக மிகமுக்கியமான வேலை தான் இந்த ஒருங்கிணைப்புக் குழு செய்ய இருக்கின்றார்கள்.