சென்னை: அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
தந்தையர் தினத்தையொட்டி திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
நீங்கள் எப்போதும் என்னை சிரிக்க வைக்கக்கூடிய மனிதர். நீங்கள் மிகவும் புத்திசாலியான மனிதர். நீங்க எப்பவும் எனக்கு ஒரு இடத்தை புன்னகையோடு கொடுத்தீர்கள். ஒரு தந்தையால் மட்டுமே ஒரு மகளை பராமரிக்க முடியும் என்பது போல நீங்கள் எப்போதும் என் மீது அக்கறை கொண்டிருந்தீர்கள். என் துணிச்சலை பாராட்டி உள்ளீர்கள். சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, அப்பா, தலைவர், நண்பர், வழிகாட்டி, சித்தாந்தவாதியை நான் ரொம்ப மிஸ் பண்றேன். பாடங்களுக்கும் நினைவுகளுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.