சென்னை: மாணவர்களின் வெற்றிதான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; இளைஞர்கள், பெண்களை அறிவில் சிறந்தவர்களாக உருவாக்க உறுதி எடுத்துக் கொண்டேன். வெற்றியை நோக்கிதான் வாழ்க்கையில் எல்லோரும் செல்கிறோம். மாணவர்களுக்கான வெற்றிப் படிக்கட்டுகளை அமைக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. 41 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து நல்ல வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3.28 லட்சம் மாணவர்கள் பணி நியமனம். நான் முதல்வன் திட்டத்தின் வெற்றியை உண்மையில் நான் வெற்றிபெற்றதை போன்றுதான் உணர்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மாணவர்களின் வெற்றிதான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
0