ஹூண்டாய் நிறுவனம், வெர்னா எக்ஸ்எக்ஸ் பிளஸ் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஐவிடி கியர் பாக்ஸ் உடன் கிடைக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும் 143.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
எல்இடி ஹெட்லைட், முன்புற பார்க்கிங் சென்சார்கள், 16 அங்குல அலாய் வீல்கள், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பெட்ரோல் எஸ் ஐவிடி மற்றும் பெட்ரோல் எஸ்எக்ஸ் ஐவிடி ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக இது இருக்கும். எனினும் டாப் வேரியண்டான எஸ்எக்ஸ் (ஓ)வில் உள்ள பல அம்சங்கள் இதில் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.13.79 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.