ஹூண்டாய் மோட்டார், புதிய மேக்னா எக்ஸிகியூட்டிவ் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 88 பிஎஸ் பவரையும், 114.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
6 ஏர் பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், விஎஸ்எம், ஹில் அசிஸ்ட், 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 12 அங்குல வீல்கள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மேக்னாவை விட குறைந்த விலையில், ஸ்போர்ட் (ஓ) வேரியண்ட்டை விட அதிகமான அம்சங்களுடன் இந்த கார் வெளிவந்துள்ளது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.7.51 லட்சம். இதன் டாப் வேரியண்டான சிவிடி வேரியண்ட் சுமார் ரூ.8.89 லட்சம். மாருதி சுசூகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா கிளான்சா ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.