Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ் சிஎன்ஜி

ஹூண்டாய் நிறுவனம், எக்ஸ்டர் இஎக்ஸ் பேஸ் வேரியண்டில், சிஎன்ஜி காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஏ பை-பியூயல் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது சிஎன்ஜியில் இயங்கும்போது அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 95.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 27.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

ஸ்டாண்டர்டு அம்சமாக 6 ஏர் பேக்குகள், 3 பாயிண்ட் சீல் பெல்ட் , ரிமைண்டர்கள் இடம் பெற்றுள்ளன. 4.2 அங்குல டிஎப்டி எம்ஐடி ஸ்கிரீன் உடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எச் வடிவ எல்இடி டெயில் லைட்டுகள், உயரத்தை மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய டிரைவர் சீட், கீலெஸ் என்ட்ரி உட்பட பல அம்சங்கள் உள்ளன. டூயல் சிஎன்ஜி சிலிண்டர் பொறுத்தப்பட்டுள்ளது. காரின் தோற்றத்தில் மாற்றம் எதுவும் இல்லை. ஷோரூம் விலையாக சுமார் ரூ.7.51 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பேஸ் வேரியண்டின் பெட்ரோல் காரை விட சுமார் ரூ.1.15 லட்சம் அதிகம். டாப்வேரியண்டான எஸ்எக்ஸ் நைட் எடிஷன் சிஎன்ஜி சுமார் ரூ.9,48,300.