ஐதராபாத்: ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த சுவேதா என்பவர் விமான நிலையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். குடும்பப் பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? என விமான நிலைய போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.