தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள 4 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
















