திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (46). இவருக்கும் தேவி (39) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக ஸ்ரீதேவி திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், மனைவி மீது சந்தேகமடைந்த சுந்தரமூர்த்தி அடிக்கடி ஸ்ரீதேவியிடம் சண்டை போட்டுவவந்துள்ளார். அதேப்போல் நேற்றும் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நிதானத்தை இழந்த சுந்தரமூர்த்தி வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை கொதிக்க வைத்து அதை ஸ்ரீதேவி மீது ஊற்ற முயற்சித்துள்ளார்.
இதனை ஸ்ரீதேவி தடுக்க முயன்று இருவருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் இருவர் மீதும் கொதிக்கும் எண்ணெய் கொட்டியது. இதனால், இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. தாய் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதைப் பார்த்த மூத்த மகள் வீட்டிலிருந்த அருவாள் மனையால் தந்தையை தலை மற்றும் தோல் பகுதிகளில் வெட்டியதில் சுந்தரமூர்த்தி பலத்த காயமடைந்தார். தீக்காயம் ஏற்பட்ட ஸ்ரீதேவி மற்றும் தீக்காயத்துடன் வெட்டு காயம் ஏற்பட்ட சுந்தரமூர்த்தி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.