ஜெயங்கொண்டம், நவ. 11: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சூசையப்பர் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரது மனைவி மெர்சி (22). தம்பதியிடையே நேற்று குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அலெக்ஸ் அரிவாளால் மனைவி மெர்சியின் கழுத்தில் வெட்டினார். இதில் காயம் அடைந்த மெர்சியை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குபின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.