பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே தனியாருக்கு சொந்தமான சாத்கர் மலைப்பகுதியில் கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(24), இவரது தங்கையின் கணவர் விஜய்(23), உறவினர் சபரேசன்(25) ஆகியோர் நேற்று நாட்டு துப்பாக்கியுடன் வவ்வால் வேட்டையாட சென்றுள்ளனர். சிலம்பு ஜொனை என்ற இடத்தில் உள்ள வவ்வால் குகையின் உள்ளே மூன்று பேரும் செல்லும் போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியிலிருந்த குண்டு ரவைகள் வெடித்து ஹரிகிருஷ்ணன் மார்புமீது பாய்ந்துள்ளது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தார். தகவலறிந்து பேரணாம்பட்டு போலீசார் விரைந்து சென்று ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குபதிந்து விஜய், சபரேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வேட்டைக்கு சென்றபோது குண்டு பாய்ந்து வாலிபர் பலி
0