Friday, March 29, 2024
Home » ஹண்டர் 350 மோட்டார் சைக்கிளை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ராயல் என்பீல்டு நிறுவனம்..!!

ஹண்டர் 350 மோட்டார் சைக்கிளை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ராயல் என்பீல்டு நிறுவனம்..!!

by Kalaivani Saravanan

ராயல் என்பீல்டு நிறுவனம், ஹண்டர் 350 என்ற மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்திருந்தது. அறிமுகம் செய்து 6 மாதங்களிலேயே ஒரு லட்சம் பைக்குகளுக்கு மேல் விற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இதே பைக்கை அடிப்படையாக வைத்து மெட்டியோர் 350 மற்றும் கிளாசிக் 350 பைக்குகளை சந்தைப்படுத்தியது.

இதில், ஹண்டர் 350 மோட்டார் சைக்கிளை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.3,999 (சுமார் ரூ.3.26 லட்சம்) டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் சுமார் 4,199 டாலர் (சுமார் ரூ.3.43 லட்சம்). தற்போது இந்தியச் சந்தையில் உள்ள ஹண்டர் 350 மெட்ரோ விலை ரூ.1.67 லட்சம் இத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க சந்தையில் இந்த பைக்கின் விலை 2 மடங்கிற்கு மேல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

eight − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi