மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான மாதிரி விண்கலம் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். 17 கி.மீ. தொலைவுக்கு மாதிரி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பத்திரமாக பாராசூட் மூலம் கடலில் இறக்கப்பட்டது. திட்டமிட்டபடி சரியான பாதையில் ககன்யான் மாதிரி விண்கலம் கடலில் இறக்கப்பட்டது. மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் மாதிரி கலன் தரையில் இருந்து 17 கி.மீ. தொலைவுக்கு ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டர் திறன் கொண்ட ராக்கெட் மூலம் மாதிரி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.










