பிரிஸ்டோல்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்று நடக்கும் 3வது போட்டியிலும் இங்கிலாந்து வென்று ஒயிட் வாஷ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டி20 ஆட்டம் பிரிஸ்டோல் நகரில் நடந்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. அதனையடுத்து 20 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் கண்டது.
அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், 18.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து இலக்கை கடந்தது. அதனால் அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டம் இன்று சவுத்ஹாம்டனில் நடக்கிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து வென்று வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.