சென்னை: முறைகேடு புகாரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் ஆராவமுது உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசூரில் வீட்டு வசதி வாரிய ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் கைது
139