சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில், தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோக பராமரிப்புக்கு உதவும் ரசாயன பொருட்கள் தயாரித்தல் தொடர்பான செய்முறை பயிற்சியை வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தவுள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கட்டிட வளாகத்தில் இப்பயிற்சி நடைபெற உள்ளது.
இதில் பித்தளை மற்றும் செம்பு க்ளீனர் திரவம், டாய்லெட் & டைல்ஸ் க்ளீனர், கார் வாஷ் ஷாம்பு, சோப்பு திரவம், டிஷ் வாஷ் திரவம், பர்னிச்சர் மற்றும் மர பாலிஷ் திரவம், ப்ளோர் கிளீனர், பேப்ரிக் சாப்ட்னர், கிளாஸ் கிளீனர், சானிடைசர், சோப்பு எண்ணெய், துருப்பிடிக்காத ஸ்டீல் பாலிஷ், வாஷிங் பவுடர் ஊதுபத்தி மற்றும் மெழுகுவத்தி தயாரிப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் ஆண், பெண், திருநங்கைகள் 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். விண்ணப்பம் மற்றும் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய www.editn.in என்ற வலைத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.