ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவையும் சேர்த்து செய்தால் மொறு மொறுவென்று இருக்கும்.
குலோப் ஜாமூன் கல் உருண்டை ஆகி விட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் வைத்து விட்டால் மென்மையாகி விடும்.
இளசான முருங்கைக் கீரையை நன்கு அலம்பி எண்ணெய் விட்டு, உப்பு போட்டு நன்கு வதக்கி அதை சப்பாத்தி மாவுடன் போட்டு பிசைந்து மெல்லிய சப்பாத்தி செய்தால் ருசியாக இருக்கும்.
தக்காளிச் சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் மனம் அதிகமாக இருக்கும்.
வெங்காயம் விரைவில் வதங்க எண்ணெயில் சிறிது உப்பை தூவி வதக்கினால் சிறிது நேரத்தில் பொன்னிறமாகி விடும்.
மாவில் பூச்சியோ, வண்டுகளோ வராமல் இருக்க, ஒரு ஸ்பூன் உப்பை சிறிய துணியில் முடிந்து மாவில் போட்டு வையுங்கள்.
பூண்டுடன் கேழ்வரகை கலந்து வைத்துக் கொண்டால் புழு பிடிக்காமல் நீண்ட நாட்கள் இருக்கும்.
டீத்தூளை சிறிது நேரம் வெயிலில் உலரவைத்து, பிறகு டீ போட்டு சாப்பிட அதிக மணத்துடன், ருசியுடனும் இருக்கும்.
மூன்று பங்கு அரிசிக்கு 1 பங்கு உளுந்து போட்டு அரைத்து எண்ணெய் இல்லாமல் தோசை வார்க்கலாம். ஆரம்பத்தில் தோசைக் கல்லின்மீது ெகாஞ்சம் எண்ணெய் தடவினால் போதும். தோசை. மெத்தென்றும் இருக்கும்.
பாசிப் பயறு, கேழ்வரகு இரண்டையும் மாவாக அரைத்து, பால், கருப்பட்டி கலந்து கஞ்சியாக்கி குழந்தைக்கு கொடுக்க எடை கூடும்.
காரம் சாப்பிட்டு நாக்கு எரிச்சலால் அவதிப்படுபவர்கள் ஐஸ் கட்டியை நாக்கில் வைத்தால் அதிலிருந்து விடுபடலாம்.
சாம்பார் செய்யும்போது துவரம் பருப்புடன், வேர்க்கடலை சேர்த்து வேகவைத்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
பரோட்டாவுக்கு மாவு பிசையும்போது, அதில் சிறிதளவு பால் பவுடர் கலந்து பிசைந்தால் பரோட்டா மெதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
குருமா செய்யும்போது தேங்காயுடன் சிறிது பாதாம் பருப்பை சேர்த்து அரைத்து செய்தால் சுவையும், ஆரோக்கியமும் கூடும்.
வறுத்த வேர்க்கடலையை பொடியாக்கி, பொரியல், கூட்டு செய்யும்போது சேர்த்தால் சுவை கூடும்.
– எஸ்.விஜயலட்சுமி