சென்னை: சென்னை வளசரவாக்கம் அடுத்த காரம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. சாந்தி என்பவர் மீது மயக்க மருந்து தெளித்து கை, கால்களை கட்டிப்போட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார். வாயில் துணியை வைத்து அடைத்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து சாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.