ஆக்ரா: உபியின் ஆக்ராவில் ஓட்டலில் 25 வயது பெண் ஊழியர் பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமையன்று ஓட்டலில் இருந்த பெண்ணுக்கு மதுவை ஊற்றி கொடுத்து 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து காவலர்கள் விரைந்து சென்று பெண்ணை மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதுகுறித்து உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறும்போது,‘‘சனிக்கிழமை நள்ளிரவில் அந்த பெண் காவல்துறைக்கு புகார் அளித்தார். காவலர்கள் உடனடியாக அங்கு சென்று 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். அதற்கு பின் அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். வலுக்கட்டாயமாக மது அருந்த சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுத்ததால் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர். ஓட்டல் சீல் வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.