ஓசூர்: ஓசூர் அருகே ஆடு மொத்த வியாபாரியிடம் போலீஸ் என கூறி ரூ.25 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர். திருப்பத்தூர் புலியனேரியைச் சேர்ந்த வியாபாரி சரவணன், ஆடுகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகளை விற்று வசூலித்த பணத்துடன் பத்தளப்பள்ளி சென்ற வியாபாரியிடம் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த 4 பேர் போலிஸ் என கூறி வியாபாரியை அழைத்துச் சென்றுள்ளனர். உத்தனப்பள்ளி அருகே அகரம் என்ற பகுதியில் வியாபாரி சரவணனை இறக்கிவிட்டுவிட்டு ரூ.25 லட்சத்துடன் 4 பேர் தப்பியுள்ளனர்.