கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே 13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். ஒசூர் அஞ்செட்டி அடுத்துள்ள மாவட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் பாட்டீல், இவரது மகன் ரோகித் (13) 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 2 பேரால் நேற்று முன்தினம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இதை தொடர்ந்து மாவட்டி கிராமத்தை சேர்ந்த புட்டண்ணா என்பவரின் மகன் மாதேவன் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உன்சவல்லி பகுதியை சேர்ந்த மாரப்பாவின் மகன் மாதேவா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மகாதேவன் மற்றும் அவரது காதலி ரதி கிருஷ்ணகிரி கலைக்கல்லூரி பகுதியிலே 2 ஆம் ஆண்டு படித்துவரும் இவர் தனிமையில் இருந்ததை சிறுவன் ரோகித் பார்த்தது தெரியவந்தது. இவன் வெளியே கூறிவிடுவான் என்று கூறியதுடன் ரதியை ரோகித் அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த மாதவன் தனது நண்பன் மகாதேவாவுடன் சேர்ந்து சிறுவனை காரில் கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மகாதேவனின் காதலி ரதியும் கைது செய்யப்பட்டார்.