ஹோண்டா நிறுவனம் கடந்த ஆண்டு நடந்த மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் ஹோண்டா டிரான்ஸ்லாப் மோட்டார் சைக்கிளைக் காட்சிப் படுத்தியது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஹோண்டா எக்ஸ்எல்750 டிரான்ஸ்லாப் என்ற அட்வன்சர் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 1980களில் இருந்த டிரான்ஸ்லாப் அடிப்படையில் நவீன அம்சங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 21 அங்குல முன்புற வீல்கள், 18 அங்குல பின்புற வீல்கள் , 43 மி.மீ தலைகீழ் டெலஸ்கோப் சஸ்பென்ஷன, டூயல் சானல் ஏபிஎஸ், 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே உள்ளது.
இந்த பைக்கில் 755 சிசி லிக்விட் கூல்டு பேரரல் டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 75 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. இன்ஜின் திறனை மேம்படுத்த நிக்கல் – சிலிக்கான் பூச்சுடன் கூடிய சிலிண்டர்கள் இன்ஜினில் இடம் பெற்றுள்ளன. 5 வித ரைடிங் மோட்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.10.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.