ஹோண்டா நிறுவனம்,மேம்படுத்தப்பட்ட ஹைனஸ் சி350 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் டிஎல்எக்ஸ், டிஎல்எக்ஸ் புரோ மற்றும் டிஎல்எக்ஸ் புரோ குரோம் ஆகிய வேரியண்ட்கள் உள்ளன. இதில் உள்ள 348.36 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 20.78 பிஎச்பி பவரையும், 30 என்மெ் டார்க்கையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் இடம் பெற்றுள்ளது. புதிய வாகன சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப பிஎஸ்6 ஓபிடி 2பி தொழில் நுட்பம் இடம் பெற்றுள்ளது.
புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பியர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் பியர்ல் டீப் கிரவுண்ட் கிரே ஆகிய வண்ணங்கள் மூன்று வேரியண்டிலும் கிடைக்கம். ரிபல் ரெட் மெட்டாலிக், அத்லெடிக் புளூ மெட்டாலிக் ஆகிய வண்ணங்கள் டிஎல்எக்ஸ் புரோ மற்றும் டிஎல்எக்ஸ் புரோ குரோம் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். புளூடூத் இணைப்புடன் கூடிய செமி டிஜிட்டல் கன்சோல், டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சானல் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.2.1 லட்சம். டாப் வேரியண்ட் ரூ.2.15 லட்சம்.