ஹோண்டா நிறுவனம், 50வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கோல்டுவிங் ஜிஎல் 1800 ஸ்பெஷல் எடிஷன் டூரர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1,883 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 126.4 எச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிசிடி மற்றும் ரிவர்ஸ் கியர் வசதி உள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியவை ஸ்டாண்டர்டு அம்சமாக இடம் பெற்றுள்ளன.
விலை விவரம் மற்றும் எப்போது டீலர்களுக்கு அனுப்பப்படும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. தற்போதுள்ள கோல்டு விங் ஸ்டாண்டர்டு ஷோரூம் விலை சுமார் ரூ.39.7 லட்சம்.