Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

ஹோண்டா கோல்டு விங் ஸ்பெஷல் எடிஷன்

50 ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோல்டு விங் ஸ்பெஷல் எடிஷனை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1,883 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 126.4 எச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் மற்றும் ரிவர்ஸ் கியர் வசதி உள்ளது.

7 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடு-பை-வயர் தொழில்நுட்பம், டூர், ஸ்போர்ட், எகானமி மற்றும் ரெயின் என 4 ரெய்டிங் மோட்கள் உள்ளன. பாதுகாப்பு அம்சமாக ஏர்பேக் இடம் பெற்றுள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.39.9 லட்சம். கோவில்ட் விங் டூர் மோட்டார் சைக்கிளை விட இது ரூ.70,000 அதிகம்.