ஹோண்டா நிறுவனம், 650 சிசி திறன் கொண்ட சிபி 650ஆர் மற்றும் சிபிஆர்650ஆர் ஆகிய மோட்டார் சைக்கிள்களை கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில், இவற்றின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்கள் உற்பத்தியை நிறுத்துவதாக இந்த நிறுவனம் அறிவித்தது. தற்போது இந்த இரண்டு பைக்குகளையும் இ-கிளட்ச் தொழில்நுட்பத்துடன் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. எனவே, இனி இந்த பைக்குகள் இ-கிளட்சுடன் மட்டுமே கிடைக்கும். இவற்றில் 649 சிசி இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது.
இது அதிகபட்சமாக 12,000 ஆர்பிஎம்-ல் 95 எச்பி பவரையும், 9,500 ஆர்பிஎம்-ல் 63 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, புளூடூத் இணைப்பு வசதி, முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர் உள்ளன. ஷோரூம் விலை, சிபி650ஆர் சுமார் ரூ.9.6 லட்சம். சிபிஆர்650ஆர் சுமார் ரூ.10.4 லட்சம். அதாவது, கிளட்ச் வசதி சேர்க்கப்பட்டதால் பைக்கின் விலை சுமார் ரூ.40,000 அதிகரித்துள்ளது.