ஹோண்டா நிறுவனம், இ-கிளட்சு கொண்ட சிபி650ஆர் மற்றும் சிபிஆர்650ஆர் ஆகிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகளில் 649 சிசி இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 12,000 ஆர்பிஎம்-ல் 95 எச்பி பவரையம், 9,500 ஆர்பிஎம்ல் 63 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. இ-கிளட்ச் சேர்க்கப்பட்டதால் பைக்கின் எடை 2.8 கிலோ அதிகரித்துள்ளது.
இ-கிளட்ச் வசதி உள்ளதால், கிளட்சை பிடிக்காமலேயே கியரை மாற்ற முடியும். விருப்பப்படுவோர் மேனுவலாகவும் கிளட்சை பிடித்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். இ-கிளட்ச் வேரியண்ட் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டை விட சுமார் ரூ.40,000 அதிகம். இதன்படி சிபி650ஆர் சுமார் ரூ.9.6 லட்சம் எனவும், சிபிஆர்650ஆர் சுமார் ரூ.10.4 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.