சமீபகாலமாக, இளைஞர்களைக் கவரும் வகையில் 125 சிசி பிரிவில் பெரிய திறன் கொண்ட பைக்கின் தோற்றத்தில் டூவீலர்களை நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன. இந்த வரிசையில் ஹோண்டா நிறுவனம் 125 சிசி பிரிவில் சிபி125 ஆர் என்ற மோட்டார் சைக்கிளை சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பைக்கில் 124.9 சிசி இன்ஜின் இடம் பெற்றுளளது. இது அதிகபட்சமாக 14.74 பிஎச்பி பவரையும், 11.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முன்புறம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் இடம் பெற்றுள்ளது. 4 வண்ணங்களில் கிடைக்கும். சர்வதேச சந்தையில் இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 4.48 லட்சம். இது கேடிஎம்125 டியூக்கிற்கு போட்டியாக இருக்கும். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியச் சந்தையில் 125 சிசி மோட்டார் சைக்கிள்களின் விலை அதிகபட்சமாக ரூ.2 லட்சத்துக்குள்தான் உள்ளது. எனவே, இந்திய சந்தையில் இதற்கு ஏற்ப சிபி125 விலை இருக்கும் என தெரிகிறது.
ஹோண்டா சிபி125ஆர்
191