Sunday, February 25, 2024
Home » ஓரின சேர்க்கையில் ஏற்பட்ட பிரச்னை? நண்பரை கொலை செய்துவிட்டு வாலிபர் தூக்குப் போட்டு சாவு: முகப்பேர் விடுதியில் பயங்கரம்

ஓரின சேர்க்கையில் ஏற்பட்ட பிரச்னை? நண்பரை கொலை செய்துவிட்டு வாலிபர் தூக்குப் போட்டு சாவு: முகப்பேர் விடுதியில் பயங்கரம்

by Arun Kumar


அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை எம்.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (25). இவர் அம்பத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த 8ம்தேதி வேலைக்குச் சென்ற லோகேஷ் வீட்டுக்கு வராததால் பெற்றோர் அவரது செல்போனில் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தபோதும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து லோகேஷின் பைக் நம்பர் மற்றும் அவரது செல்போன் டவர் மூலம் தேடி வந்தனர்.

இதனிடையே லோகேஷ் உடன் பணியாற்றிவரும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த வாஞ்சிநாதன் (27) என்பவரும் அதே நாளில் காணவில்லை என்று அவரது அக்கா, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஒரேநாளில் லோகேஷ், வாஞ்சிநாதன் ஆகியோர் காணாமல்போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்றிரவு வாஞ்சிநாதன், தனது அக்காவுக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார்.

அதில், ‘’நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என்னை தேட வேண்டாம்’ என்று தெரிவித்து இருந்தார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அம்பத்தூர் காவல்நிலைய போலீசாருக்கு தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் கிருபாநிதி, அம்பத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் செல்போனில் வந்த தகவல் நம்பரை வைத்தும் டவர் மூலமும் விசாரணை நடத்தியபோது முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியை காண்பித்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று அந்த விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்கப்படாததால் விடுதி ஊழியர்கள் உதவியுடன் போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது லோகேஷ் தரையில் இறந்தநிலையிலும் வாஞ்சிநாதன் தூக்கிட்ட நிலையிலும் கிடந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நொளம்பூர் போலீசார் வந்து இரண்டு பேரின் சடலத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். லோகேஷ், வாஞ்சிநாதன் ஆகியோர் ஓரினச் சேர்க்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. கடந்த 8ம்தேதி வேலைக்குச் சென்ற இருவரும் முகப்பேரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாஞ்சிநாதன், லோகேஷின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இதன்பின்னர் வாஞ்சிநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வாஞ்சிநாதனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதை தெரிந்துகொண்ட லோகேஷ் தன்னை விட்டு வாஞ்சிநாதன் பிரிந்துவிடுவார் என்ற அச்சத்தில் தொடர்ந்து வாஞ்சிநாதனுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த வாஞ்சிநாதன், லோகேஷை கொலை செய்துள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. எனவே, ஓரினச் சேர்க்கை தகராறில் கொலை நடந்ததா, வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மேலும் தனியார் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

You may also like

Leave a Comment

2 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi