நாகர்கோவில்: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்க காரணம், நாம் இருமொழி கொள்கையை பின்பற்றி வருகிறோம். தாய்மொழியையே கற்றுக்கொள்ள முடியாது இருக்கின்ற சூழலில் குலக்கல்வி முறையை மறைமுகமாக கொண்டுவரப் (ஒன்றிய அரசு) பார்க்கிறார்கள். இதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் நமக்கான மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 100 சதவீதம் பள்ளிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘தி நேஷனல் சிலபஸ் அன்ட் டீச்சிங்-லேனிங் மெட்டீரியல் கமிட்டி’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த உயர்மட்ட கமிட்டி ஒரு பரிந்துரையை (பாடப் புத்தகத்தில் இந்தியா – பாரத் பெயர் மாற்றம்) செய்துள்ளது, அந்த பரிந்துரையை தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் ஏற்றுக்கொண்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.