புதுடெல்லி: நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் உள்ள தனது முகப்பு படத்தை நீக்கிவிட்டு தேசியக்கொடியை வைத்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்த ஆண்டு சுதந்திர தினம் நெருங்கி வருகின்றது. எனவே வீடு தோறும் தேசியக்கொடி என்பதை மறக்க முடியாத மக்களுக்கான இயக்கமாக மீண்டும் மாற்றுவோம். நான் எனது முகப்பு படத்தை மாற்றுகிறேன். உங்களது செல்பிக்களை hargartiranga.comல் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.