டெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்த குழு நடத்திய விசாரணையில், முறைகேடுக்கான முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, யஷ்வந்த் வர்மாவை தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தார். யஷ்வந்த் வர்மா தற்போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.
வீட்டில் கட்டுக்கட்டாக பணம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக தகுதிநீக்க தீர்மானம்?
0