Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வீட்டிலேயே எளிமையாக ஃபேசியல் செய்யலாம்!

எந்த கெமிக்கல் ஃபேசியல் செய்தாலும் அலர்ஜியாகும் பிரச்னை இருக்கிறதா? இதோ வீட்டிலேயே இயற்கையான பொருட்களைக் கொண்டு ஃபேசியல் (Facial) செய்துகொள்ள வழிகள்.

எளிமையான 5 கட்டங்கள் கொண்ட இயற்கையான ஃபேசியல்

1. கிளென்ஸிங்

செய்முறை

பசும்பால் (raw milk) அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தில் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவவும்.

பயன்

மாசுகள், எண்ணெய்ப்பிசுக்கு, நீங்கி சருமத்துளைகள் தூய்மையாகும்.

2. ஸ்க்ரப்பிங்

செய்முறை

1 மேசைக்கரண்டி சர்க்கரை

1 மேசைக்கரண்டி தேன்

சிறிது எலுமிச்சைச்சாறுஇவற்றை கலந்து முகத்தில் மெதுவாக 2-3 நிமிடம் மசாஜ் செய்து, கழுவவும்.

பயன்:

இறந்த செல்கள், கரும்புள்ளிகள் (blackheads) அகற்ற உதவும்.

3. ஸ்டீமிங்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து, ஆவி பிடிக்கவும். இந்த நீரில் ரோஜா இதழ்கள், துளசி, தேயிலை உள்ளிட்டவைகளும் கலந்து நீராவிபிடிக்கலாம்.

பயன்

ரோமங்களைத் திறந்துகொள்ளச் செய்து, அழுக்குகளை வெளியேற்றஉதவும். பின் மூக்கு , தாடை உள்ளிட்ட பகுதிகளில் சற்றே கூர்மையான கம்பி கொண்டு சருமத்துவாரங்களில் இருக்கும் கரும்புள்ளிகளைச் சுரண்டி எடுக்கவும்.

4. ஃபேஸ் பேக்

செய்முறை

2 மேசைக்கரண்டி பசும்பாலைக் கிழங்கு மாவுடன் கலந்து கொள்ளவும்.

1 மேசைக்கரண்டி தேன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு (எண்ணெய்ப்பிசுக்குச் சருமம் என்றால்) இந்தக் கலவையை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் விட்டுக் கழுவவும்.

பயன்

தோலின் பொலிவை கூட்டும் மற்றும் பளிச்சென்று ஆக்கும்.

5. டோனிங் & மாய்ச்சரைசிங்

டோனிங்: ரோஸ் வாட்டர் அல்லது இளநீர் சிறிது முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளவும்.

மாய்ச்சரைசிங்: ஆலிவ் ஆயில், ஆலோவேரா ஜெல் அல்லது தேன் போன்ற இயற்கையான மாய்ச்சரைசர் பயன்படுத்தலாம்.

இந்த இயற்கை ஃபேசியலை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். பிம்பம் போல் பளிச்சென்ற முகம் உங்கள்சொந்தமாகும்!

- கவின்