ஏழை எளிய மக்கள் தனக்கான ஒரு சிறிய இடம் வாங்குவதற்குள் பலகட்ட யோசனைகள் சவால்களை சந்தித்துதான் ஆக வேண்டியிருக்கிறது. அப்படியே பணத்தைச் செலவு செய்து மனை வாங்கினாலும் அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கின்றனவா அல்லது நாம் வாங்கிய மனை நகரத்துக்கு அருகில் உள்ளதா போன்ற பல தயக்கங்களும், பயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்குதான் வீட்டு மனைகள் அதன் அங்கீ காரம் உள்ளிட்ட துல்லியமான தகவல்களை மக்கள் எளிதாக ஆய்வு செய்ய, மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ‘நம்ம குடியிருப்பு ‘(Namma Kudiyiruppu) செயலி, தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் அமைப்பே இந்தச் செயலியை உருவாக்கியிருக்கிறது.
இதில், ஒற்றைச் சாளர முறையில் அங்கீகாரம் வழங்கப்படும் மனைப்பிரிவுகளின் இருப்பிட விவரங்கள், ஜி.பி.எஸ்., எனப்படும், புவிசார் தகவல் அமைப்புடன் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது. இதனால், அங்கீகார எண் அல்லது சர்வே எண்ணைப் பயன்படுத்தி, மக்கள் அந்த மனைப்பிரிவு எங்கு அமைந்துள்ளது என்பதை எளிதாக அறியலாம்.அங்கீகார வரைபடத்துடன், சாலை மற்றும் பொது இடங்கள், வழிகாட்டி மதிப்பு, பரப்பளவு போன்ற பல்வேறு விவரங்களை மக்கள் எளிதாக பார்க்கவும் இந்தச் செயலி வழிவகுக்கிறது. தற்சமயம் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி பிரிவிற்காக உருவாக்கப்பட்டுள்ளது இந்தச் செயலி. கூடிய விரைவில் முழுமையான பட்டா நிலங்களுக்கான செயலி ஒன்றும் வரவிருப்பதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.