கேட்டவுடன் அதிர்ச்சியாக இருக்கிறதா? நிச்சயம் இருக்கும். ஏனெனில் நம்மூரில் இந்த வாடகையை மாதத் தவணையாக இரண்டு வருடங்கள் கட்டினாலே ஒரு சொந்த வீடே வாங்கி விடலாம். இதில் இன்னும் கொஞ்சம் புறநகர் எனில் ஒரு வருடமே போதுமானது. உண்மையில் பெங்களூருவில் இப்படி ஒரு சம்பவம் இணையவாசிகளை அதிர்ச்சியாக்கியிருக்கிறது. பெங்களூரு நகரில் உள்ள ஹரலூர் பகுதியில் உள்ள ஒரு 3BHK அபார்ட்மென்ட் மாத வாடகை ரூ. 2.7 லட்சம் என்றும், அட்வான்ஸ்ரூ. 15 லட்சம் என்றும் ஒரு இணைய பயனர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வாடகை விலை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், இது உண்மையிலேயே யாராவது செலுத்துகிறார்களாஎனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ‘‘அதே அபார்ட்மென்டில் உள்ள மற்ற வீடுகளுக்கு ரூ. 50,000க்கு வாடகைக்கு கொடுக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், ‘‘கூடுதலாக ஒரு பூஜ்ஜியம் தவறுதலாக சேர்க்கப்பட்டிருக்கலாம்” என்றும் கமெண்ட்கள் வரத் துவங்கியுள்ளன. சிலர், இது வாடகையை உயர்த்தும் நோக்கத்துடன் திட்டமிட்ட முயற்சி என்றும், சிலர் இது போலியான அல்லது சோதனைக்கான பதிவாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம், பெங்களூருவின் காஸ்ட்லி வாழ்க்கையை குறிப்பதாக பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.ரூ. 20,000 சம்பளம் வாங்கும் ஒரு நபர் கூட பெங்களூரு மெட்ரோ வாழ்க்கையைஎல்லாம் கனவில் கூட அனுபவிக்க முடியாது எனவும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
3BHK வீட்டு வாடகை ரூ. 2.7 லட்சம் !
0