நன்றி குங்குமம் டாக்டர்
*குப்பைமேனி இலையைப் பொடித்துத் தக்க அளவாக குழந்தைகளுக்குக் கொடுக்க மலப்புழுக்கள் வெளிப்படும்.
*சாதிக்காயை அரைத்துக் கண்களைச் சுற்றிப் பற்றிட கண்கள் ஒளியடையும்.
*சுக்கை தூளாக்கி மூவிரல் அளவு அப்போது கறந்த பசும்பாலில் சேர்த்துக் கொடுக்க பசியுண்டாகும்.
*சுரைக்கீரையை உள்ளிப்பூண்டு சேர்த்து சமைத்து ஒரு மண்டலம் புசித்து வர நீரேற்றம் நீங்கும்.
*செம்பருத்தி பூவை குடிநீர் அல்லது ஊறல் நீர் செய்து வேளைக்கு 5 மி.லி. கொடுக்க பெரும்பாடு நிற்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
*மக்காச்சோளத்தோடு தொங்கும் பட்டுப்போன்ற இதழ்களைக் குடிநீரிட்டு கொடுத்தால் நீரடைப்பு, நீர்ச்சுருக்கு முதலிய நோய்கள் நீங்கும்.
*செம்பருத்திப் பூவின் இதழ்களை தாய்ப்பாலில் அல்லது பசுவின் பாலில் ஊறவைத்துப் பிழிந்து எடுத்து சாற்றைக் குழந்தைகளின் கண்ணோய்க்கு வழங்கலாம்.
*உடல் சூடானால் முடி உதிர்வது, பொடுகு போன்ற தொல்லைகள் வரும். ஒரு பிடி கறிவேப்பிலையுடன் சம அளவு சோற்றுக் கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைத்து அந்த விழுதை தலையில் தடவி 15 நிமிடம் கழித்து அலசி வந்தால் உடல் சூடு தணிவதோடு முடியும் கருகருவென்று நன்றாக வளரும்.
*லவங்க பட்டையை பொடியாக்கி, இதனுடன் தேன் கலந்து பூசிவர பல்கூச்சம், பல் வலி, ஈறுகள் வீக்கம் பிரச்னைகள் சரியாகும்.
*பூண்டு சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும். ரத்த நாளங்கள் இலகுவாகும். இதயம் சார்ந்த பிரச்னைகள் குணமாகும். ரத்த நாளங்களில் நுழையும். பேக்டீரியாக்களை எதிர்த்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
*கத்தரிக்காயை அரைத்து வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகும்.
*அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிட ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
*நிலவேம்புக் கஷாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது.
*சுக்கு மிளகு, திப்பிலி தாமரை இதழ், வெல்லம் இந்த ஐந்தையும் சேர்த்து தண்ணீருடன் கொதிக்க வைத்து இரவில் சாப்பிட மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.
– இரா. அருண்குமார்