சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிக்கை: 28ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 29ம் தேதி (ஞாயிறு) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று சென்னையிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு அக்.27ம் தேதி (இன்று) தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விடுமுறைக்காக இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
133