தேன்கனிக்கோட்டை: ஓசூர் அருகே மத்திகிரி நேதாஜி நகரில் வசிப்பவர் சாரதி (57). இவர் ராயக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த 3ம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு சோர்வுடன் வந்துள்ளார். அதிர்ச்சியடைந்த தாயார், விசாரித்தபோது, பள்ளியில் 3ம் தேதி மதியம், தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், வலியால் அலறியபோது, அவர் அடித்ததில் மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாகவும் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், நேற்று தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ வழக்கு பதிந்து, தலைமை ஆசிரியர் சாரதியை கைது செய்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை; ஹெச்.எம். கைது
0