Tuesday, February 27, 2024
Home » தனது மாவட்டத்தில் சேலம் விஐபி ஆதரவாளர்கள் நடத்திய செயலால் டென்ஷனான தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

தனது மாவட்டத்தில் சேலம் விஐபி ஆதரவாளர்கள் நடத்திய செயலால் டென்ஷனான தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by MuthuKumar

‘‘எதிர்க்கட்சியா இருந்தாலும் இப்போதும் வசூல தக்கவச்சிருக்காராமே இலைக்கட்சி எம்எல்ஏ..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. அது உண்மைதான். ேகாவையை சேர்ந்த ‘கடவுள்’ பெயர் கொண்ட இலைக்கட்சி எம்எல்ஏ ஒருவர், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், கோவை வடக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் ‘பார்’களை தனது கட்டுப்பாட்டில்தான் வைத்துள்ளாராம். பல ‘பார்’கள் அரசுக்கு முறையாக டெபாசிட் பணம் செலுத்தாமல், இவரது மேற்பார்வையில்தான் இயங்கி வருகிறது. இதற்காக, ஒவ்ெவாரு ‘பார்’களில் இருந்தும் மாதம்ேதாறும் தலா ₹5 லட்சம் சுருட்டி விடுகிறாராம். இதில், காக்கி அதிகாரிகள் சில பேருக்கு பங்கு கொடுத்துவிட்டு மீதமுள்ளவற்றை அமுக்கி விடுகிறாராம். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், கோவை வடக்கு பகுதியில் இவரது பெயரிலேயே 2 ‘பார்’களை எடுத்து நடத்தி வருகிறாராம். மீதமுள்ளவற்றை தனது பினாமிகள் பெயரிலும், தனக்கு வேண்டப்பட்ட நபர்கள் பெயரிலும் நடத்தி வருகிறாராம். கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ‘பார்’களில் வசூல் எடுத்தவர் இவர் மட்டும்தான். மற்ற இலைக்கட்சி எம்எல்ஏக்கள் தலையீடு எதுவும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அந்த அளவுக்கு இவருக்கு மேலிடத்து ஆசியும் இருந்தது. தற்போது இலைக்கட்சி ஆட்சி இல்லாவிட்டாலும், இவரது தர்பார்…தான் தொடர்கிறது. இவரது வசூல் மழைக்கு எந்தவித பங்கமும் ஏற்படவில்லையாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டெல்டாவில் சின்னமம்மியின் திட்டத்தை முறியடிக்க தயாராகும் சேலத்துக்காரர் மேட்டரை சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேருவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை சின்னமம்மி மேற்கொண்டார். ஆனா, எந்த முயற்சியும் எடுபடவில்லை. இந்த சமயத்துல, இலை கட்சி இடைக்கால பொது செயலாளர் பதவி நீக்கம் எதிர்த்து சின்னமம்மி தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், அவரை பதவியில் இருந்து நீக்கிய தீர்மானமும் செல்லும் என உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் கடும் அப்செட்டில் இருந்து வரும் சின்னமம்மி, அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் இனிமேலும் நாம் அமைதியாக இருக்க வேண்டாம். தை பொங்கலுக்கு முன்னதாக இலை கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மிக முக்கியமாக இந்த சந்திப்பு ரகசியமாக இருக்க வேண்டும் என அதற்கான மாஸ்டர் பிளான் போட்டு அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் கொடுத்துள்ளார். இதன்மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சின்னமம்மி தயாராகி வருகிறார்.

இந்த உத்தரவை தொடர்ந்து முதற்கட்டமாக நெற்களஞ்சியம், மனுநீதிசோழன், கடலோரம், மன்னர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இலைகட்சியில் உள்ள மாஜி அமைச்சர்களை சின்னமம்மி நேரில் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளில் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். சின்ன மம்மியின் இந்த மாஸ்டர் பிளான் எப்படியோ வெளியே கசிந்ததால் சேலம்காரர் கடும் அதிர்ச்சியில் உள்ளார். சின்னமம்மியின் இந்த திட்டத்தை ஆரம்பத்தில் முறியடித்து விடவேண்டும் என நினைத்த சேலத்துக்காரர், அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் அதற்கான ஆலோசனையில் இறங்கியுள்ளார்’’ என்று சொல்லி முறுவலித்தார் விக்கியானந்தா.

‘‘கவுன்சிலர்களோட வீட்டுக்காரருங்க தலையீடு தாங்க முடியாம தவிக்கிறாங்களாமே அதிகாரிகள்?’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல, அணையான தாலுகாவுக்குட்பட்ட பள்ளி கொண்ட பேர் ஊர் ஆட்சி இருக்குது. இங்க பெண் கவுன்சிலர்ஸ்சும் இருக்குறாங்க. இதுல 3 கவுன்சிலர்ஸ்சின், வீட்டுக்காரங்க ஆட்டம் தாங்க முடியலையாம். ஆபீஸ் மீட்டிங் நடக்கும்போது கூட, கூட்ட அரங்கத்துக்கே வந்துடுறாங்களாம். அதாவது இவங்கதான் கவுன்சிலர்ஸ் மாதிரி சுற்றி வர்றாங்களாம்.

குடிநீர், தெருவிளக்குன்னு அடிப்படை பிரச்னைகளை பூதாகரமாக்கி அலுவலக வளாகத்துலயே அதிகாரிங்ககிட்ட, மல்லுகட்டுறாங்களாம். இதனால எந்த ஒர்க்கும் செய்ய முடியாம அதிகாரிங்க விழிபிதுங்கி நிக்குறாங்களாம். கவுன்சிலர்ஸ்சின் வீட்டுக்காரங்களின் இந்த தலையீடு தாங்க முடியாம அதிகாரிங்க தவிக்குறாங்களாம். இதுசம்மந்தமா உரிய நடவடிக்கை எடுத்து, மாவட்ட நிர்வாகம் இதுக்கு உடனடியாக கடிவாளம் போடணும்னு அதிகாரிங்க தரப்புல இருந்து எதிர்பார்க்குறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனிக்காரர் ஏன் ஆதரவாளர்களை கடிந்துகொண்டாராம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பொதுக்குழு விவகாரம், பொதுச்செயலாளர் தேர்வு, இலைக்கட்சி சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகளில் தொடர்ந்து ஏற்பட்ட பின்னடைவால், தேனிக்காரர் கடந்த சில மாதங்களாகவே கடும் மனச்சோர்வில் உள்ளார். இது ஒருபுறமிருக்க, தனது சொந்த ஹனீபீ மாவட்டத்திலேயே ஆதரவாளர்கள் பலர் எதிர் முகாமுக்கு படையெடுப்பதாலும் அப்செட்டில் உள்ளார். நேற்று முன்தினம் கட்சி தலைவிக்கு நினைவு தினம். பொதுவாக, கட்சி தலைவிக்கு பிறந்தநாள், நினைவு நாளில் தேனிக்காரர் தனது ஆதரவாளர்கள் என பெரும் கூட்டத்துடன் சென்று, மரியாதை செய்வது வழக்கம். இன்றளவும் இவர் தலைவிக்கு விசுவாசமாக இருந்தவராகவே கருதப்படுகிறார். ஆனால், நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்ட கட்சி தலைவி நினைவு தின நிகழ்வில் அவரது ஹனிபீ மாவட்ட ஆதரவாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லையாம்.

இதனையறிந்த சேலத்துக்காரர் தரப்பினர், ஹனிபீ மாவட்டத்தில் தலைவிக்கு நினைவு தின போஸ்டர்களை ஒட்டியும், மரியாதை செய்தும் பிரமாண்டத்தை காட்டினர். தகவலறிந்த தேனிக்காரர் அதிர்ச்சி அடைந்து, தனது ஆதரவாளர்களிடம் கடிந்து கொண்டுள்ளார். இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது என எச்சரித்துள்ளாராம். நம்மளை கண்டுக்கறதே இல்லை…. இதுல நம்ம தவறு எங்கே இருக்கிறது என ஆதரவாளர்கள் தங்கள் பங்குக்கு நொந்து கொண்டனராம்…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi