Wednesday, February 28, 2024
Home » இந்துஸ்தான் ஷிப் யார்டில் மேனேஜர் பணிகள்

இந்துஸ்தான் ஷிப் யார்டில் மேனேஜர் பணிகள்

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

1. Manager (Legal): 1 இடம் (பொது). தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் சட்டப்பாடத்தில் 3 வருட இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Manager (Commercial): 2 இடங்கள் (பொது). தகுதி: ஏதாவது ஒரு பொறியில் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி.
3. Manager (Technical): 10 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-3). தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல்/நேவர் ஆர்க்கிடெக்சர் பாடங்களில் ஏதாவது ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நேவல் ஆர்க்கிடெக்சர்/நேவல் கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி.
4. Manager (IT & ERP): 2 இடங்கள் (பொது). தகுதி: சிஎஸ்இ/ஐடி/ஈசிஇ பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 15.01.2024 அன்று 40க்குள். சம்பளம்: ₹60,000-1,80,000.
5. Deputy Manager (Finance): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 35க்குள். சம்பளம்: ₹50,000-1,60,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஐசிஏஐ/ ஐசிடபிள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. http://www.hslvizag.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.01.2024.

You may also like

Leave a Comment

one + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi